சந்நிதியான் ஆச்சிரம சைவகலை பண்பாட்டுப் பேரவையின்  ஏற்பாட்டில் ஆச்சிரம வாராந்த நிகழ்வாக ஞானச்சுடர் ஆனி மாத 342 ஆவது மலர் வெளியீட்டு நிகழ்வு   வெள்ளிக்கிழமை (26.06.2026) முற்பகல்-10.30 மணியளவில் சந்நிதியான் ஆச்சிரம மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

மேற்படி நிகழ்வில் ஆசிரியர் ச.வாகீசன் மலரின் வெளியீட்டுரையையும், யாழ்.தெல்லிப்பழை மகாஜனக் கல்லூரியின் உதவி அதிபர் கைலைநாதன் மலர் மதிப்பீட்டுரையையும் நிகழ்த்துவர்