ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க, டிஜிட்டல் பொருளாதார அமைச்சின் செயலாளராக வருண ஸ்ரீ தனபாலவை நியமித்துள்ளார்.

ஜனாதிபதியின் செயலாளர் நந்திக சனத் குமாநாயக்க இன்று வெள்ளிக்கிழமை (13) பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில், அதற்கான நியமனக் கடிதத்தை வருண ஸ்ரீ தனபாலவிடம் கையளித்தார்.
இலங்கை நிர்வாக சேவையின் விசேட தர அதிகாரியான வருண ஸ்ரீ தனபால, 2024ஆம் ஆண்டு நவம்பர் 29ஆம் திகதி முதல் இன்று வரை டிஜிட்டல் பொருளாதார அமைச்சின் பதில் செயலாளராகப் பணியாற்றி வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.