இரசாயன வாயுவை சுவாசித்த பாடசாலை மாணவர்கள் 13 பேர் பாணந்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பாடசாலையில் நடத்தப்பட்ட ஆய்வக பரிசோதனையின்போதே இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

அதனைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட மாணவர்கள் இது குறித்து முறைப்பாடு அளித்துள்ளனர்.

இந்நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள மாணவர்களின் நிலை கவலைக்கிடமாக இல்லை என வைத்தியசாலை நிர்வாகம் தெரிவிக்கிறது.