திருகோணமலை, தம்பலகாமம் பகுதியில் பெய்து வரும் கனமழை காரணமாக, தம்பலகாமம் ஐயனார் திடல் கோயில் வளாகத்தில் இருந்த 100வருடங்கள் பழமை வாய்ந்த மரமொன்று திங்கட்கிழமை (26)அடியோடு முறிந்து வீழ்ந்துள்ளது.

தொடர்ச்சியாகப் பெய்து வரும் கனமழையினால் ஏற்பட்ட பாதிப்பின் காரணமாக இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

தம்பலகாமம் எனும் நாமத்தை பரைசாற்றும் 100 ஆண்டுகால வரலாறுகளை கொண்ட பழமையான மரமே இவ்வாறு வீழ்ந்தது.

நூறு ஆண்டுகளுக்கும் மேலாக எத்தனையோ தலைமுறைகளைக் கடந்து, கோவிலின் வரலாற்றையும் நினைவுகளையும் சுமந்து நின்ற பழமையான மரம் வீழ்ந்ததில் ஆபத்துக்கள் எதுவுமின்மை தம்பலகாமம் பிரதேச சபையின் உதவியுடன் உப தவிசாளர் வி.விஜயகுமார் தலைமையில் மரத்தை வெற்றி அகற்றி தூய்மைப் பணியில் ஈடுபட்டனர்.
எத்தனையோ பக்தர்களின் வருகைக்கும், எத்தனையோ நிகழ்வுகளுக்கும் சாட்சியாக இருந்த இந்த மரத்தின் வீழ்ச்சி மனதை வருத்தமடையச் செய்கிறது அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.