தலவத்துகொடை தீ விபத்தில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட மூவர் உயிரிழப்பு. உணவகம் ஒன்றில் இன்று (09) செவ்வாய்க்கிழமை காலை ஏற்பட்ட தீ பரவலை அடுத்து, 3 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டு தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.
இந்நிலையில், விபத்து இடம்பெற்ற கட்டிடத்தில் இருந்த நபர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் 3 பேர் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை வட்டார தகவல்கள் தெரிவித்துள்ளன. மேலும், சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.