“பெரியார் அறிவுலகம் நூலகத்துக்காக அதிக விலைக்கு புத்தகங்களை வாங்கிவிட்டு, அந்தப் பழியை திமுக மீது போட நினைக்கிறார்கள்” எனத் திமுக செய்தித் தொடர்புத் தலைவர் டி.கே.எஸ். இளங்கோவன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது: திமுக ஆட்சிக்கு வந்த பிறகு மூன்று நூலகங்கள் திறக்கப்
பட்டன. குழந்தைகள் படித்து அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்பதால் மேலும் சில நூலகங்களைத் திறக்க நாங்கள் திட்டமிட்டிருந்
தோம். ஆனால் இப்போது, இந்த ஆட்சி வந்த பிறகு, அவர்கள் பணம் சம்பாதிக்க விரும்புகிறார்கள்.
எனவே அவர்கள் செய்தது என்னவென்றால், பெரியார் அறிவுலகம் நூலகத்துக்காக அதிக விலைக்கு புத்தகங்களை வாங்கிவிட்டு, அந்தப்பழியை திமுக மீது போட நினைக்கிறார்கள். திமுக ஒருபோதும் அதைச் செய்யாது.
தமிழகத்தில் மிகச்சிறந்த நூலகங்களை அமைந்தது திமுக ஆட்சியில்தான்.பெரியார் அறிவகம் நூலகத்துக்காக வாக்கப்பட்ட நூல்கள்மற்றும் எழுத்தாளர்களின் பெயர்களே, அது தவெகவின் சதி என்பதை தெளிவாகக் காட்டுகிறது.
‘திரிஷா-விஜய்’ என்பவர் ஒரு புத்தகத்தின் எழுத்தாளராம். இது வெட்கக்கேடானது இல்லையா. அந்தப் புத்தகத்தை திமுகதான் வாங்கியது என்று அவர்கள் கூறுகிறார்கள். பாஜக தான் அவர்களை திமுகவை தாக்கிப் பேசுமாறு கூறியுள்ளது; அதைத்தான் அவர்கள் உண்மையாகச் செய்து வருகிறார்கள்.
இல்லையெனில் அவர்கள் மாட்டிக்கொள்வார்கள். பாஜகவிடமிருந்து விஜய்யைப் பாதுகாக்க அவர்கள் விரும்புகிறார்கள்.
ஏனெனில், சட்டவிரோதமான வழிகள் மூலமாகவே விஜய்யை பாஜக அதிகாரத்துக்குக் கொண்டு வந்துள்ளது. எலக்ட்ரானிக் வாக்குப்பதிவு இயந்திர மோசடி மற்றும் எஸ்ஐஆர் மூலமாக மட்டுமே விஜய் ஆட்சிக்கு வந்தார். மக்களின் வாக்குகளால் அல்ல என்பதை என்னால் கூற முடியும். இவ்வாறு டி.கே.எஸ்.இளங்கோவன் தெரிவித்துள்ளார்.