வெளிநாடுகளில் பணியாற்றும் இலங்கைத் தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கான கல்வி உதவித்தொகை வழங்கும் விசேட நிகழ்வொன்று சனிக்கிழமை (11) திருகோணமலை மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.
இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் நலன்புரி பிரிவினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நாடளாவிய திட்டத்தின் கீழ், திருகோணமலை மாவட்டத்தைச் சேர்ந்த 114 மாணவ, மாணவியர்கள் இந்த உதவித்தொகைக்காகத் தெரிவு செய்யப்பட்டிருந்தனர்.
முறையாகப் பதிவு செய்யப்பட்டு, வெளிநாடுகளில் பணிபுரிந்து நாட்டிற்கு அந்நியச் செலாவணியை ஈட்டித் தரும் பெற்றோர்களின் பிள்ளைகளுக்கே இவ்வுதவித்தொகைகள் வழங்கப்பட்டன.
இதற்கமைய, மாவட்டத்தில் தரம் ஐந்து புலமை பரிசில் பரீட்சையில் சித்தியடைந்தவர்களுக்கும் சாதாரண தரம் (O/L) பரீட்சையில்
சித்யடைந்தவர்களுக்கும் மற்றும் உயர்தரப் பிரிவில் கல்வி கற்று பல்கலைக்கழகத்துக்கு தெரிவு செய்யப்பட்டவர்களுக்கும் இவை வழங்கி வைக்கப்பட்டன.
இந்நிகழ்வில் வெளிவிவகார மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்புகள் பிரதி அமைச்சர் முதன்மை விருந்தினராகக் கலந்துகொண்டு, மாணவர்களுக்கான உதவித்தொகைகளை உத்தியோகபூர்வமாகக் கையளித்தார்.
மேலும், திருகோணமலை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ். சுதாகரன், மாவட்ட வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் உயர்தர அதிகாரிகள், பணியாளர்கள் மற்றும் கல்வித்துறை அதிகாரிகள் உட்படப் பலரும் இந்நெருக்கடியான காலகட்டத்தில் மாணவர்களின் கல்வி மேம்பாட்டைக் குறிக்கோளாகக் கொண்டு நடத்தப்பட்ட இந்நிகழ்வில் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.