தமிழர்களின் தைத்திருநாளான தைப்பொங்கலை முன்னிட்டு மறு நாள் பட்டிப்பொங்கல் கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு வௌ்ளிக்கிழமை (16) பட்டிப்பொங்கல் நிகழ்வு திருகோணமலை, தம்பலகாமத்திலும் இடம்பெற்றது.

மாடுகளை குளிப்பாட்டி விசேட பூஜைகளும் இடம்பெற்றதுடன் மாடுகளுக்கு அதனுடைய கொம்புகள் மற்றும் நெற்றியில் பொட்டு வைக்கப்பட்டு பலகாரமும் பகிரப்பட்டு மாடுகள் அலங்கரிக்கப்பட்டது.

தமிழர்களின் பாரம்பரியத்தை பரைசாற்றும் இப்பட்டிப்பொங்கலானது உழவர்களின் நினைவாக எடுத்துக்காட்டப்ட்டு மாடுகளுக்கு நன்றி செலுத்துவதாகவும் காணப்படுகிறது.தம்பலகாமம் புதுக்குடியிருப்பு பகுதியில் குறித்த பட்டிப்பொங்கல் இடம் பெற்றமை குறிப்பிடத்தக்கது.