அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் நிதி உதவியுடன் திருக்கோணமலை மாநகர சபை எல்லைக்குட்பட்ட வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நேரில் விஜயம் செய்த பாராளுமன்ற உறுப்பினரும் பிரதி அமைச்சருமான அருண் ஹேமச்சந்திரா, மாநகர முதல்வர் க. செல்வராசா (சுப்ரா), திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச செயலாளர் மற்றும் அனர்த்த முகாமைத்துவ நிலைய பிரதி பணிப்பாளர் கே.சுகுணதாஸ் அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டு, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளின் நிலைமைகளை நேரில் ஆராய்ந்து அப்பகுதிகளின் தற்போதைய நிலைமைகளைப் பார்வையிட்டதுடன், பாதிக்கப்பட்ட மக்களைச் சந்தித்து அவர்களின் பிரச்சினைகள் மற்றும் அவசரத் தேவைகள் தொடர்பாகவும் கேட்டறிந்தனர்.
இதன் தொடர்ச்சியாக, திருக்கோணமலையின் வெள்ள அபாயம் நிலவும் பல்வேறு பகுதிகளில் மழைநீர் தடையின்றிச் சீராக வழிந்தோடுவதை உறுதிப்படுத்தும் வகையில், வடிகான்கள், கால்வாய்கள் மற்றும் நீர்வழிப் பாதைகளைச் சுத்தப்படுத்தி தூர்வாரும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
காலநிலை மாற்றத்தின் விளைவாக ஏற்படும் தீவிர மழைவீழ்ச்சி மற்றும் வெள்ள அனர்த்தங்களினால் ஏற்படும் பாதிப்புகளைக் குறைத்து, பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதுடன், எதிர்கால வெள்ள அனர்த்தங்களை எதிர்கொள்ளும் வகையில் நீண்டகாலத் தடுப்பு நடவடிக்கைகளை வலுப்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டு இந்நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன.