யாழ்ப்பாணம் மண்டைதீவு கடற்பரப்பில் படுகொலை செய்யப்பட்ட 31, குருநகர் கடற்தொழிலாளர்களின் 40ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் , குருநகரில் அமைக்கப்பட்டுள்ள நினைவு தூபியில் நேற்று (11) புதன்கிழமை நடைபெற்றது.
குருநகர் ஆலய பங்குத்தந்தை திருப்பலி ஒப்புக்கொடுத்ததை அடுத்து, மெழுகுவர்த்தி, தீபம் ஏற்றி மலர் தூவி மக்கள் அஞ்சலி செலுத்தினர்.
கடந்த 1986ஆம் ஆண்டு ஜூன் 10ஆம் திகதி குருநகர் பகுதியில் இருந்து 'தூயஒளி' படகில் கடலுக்குச் சென்ற 31 கடற்தொழிலாளர்கள் மண்டைதீவுக் கடற்பரப்பில் வைத்து கடற்படையினரால் படுகொலை செய்யப்பட்டனர்.
படுகொலையானவர்களின் நினைவாக குருநகரில் அமைக்கப்பட்டுள்ள நினைவு தூபியிலையே அஞ்சலி நிகழ்வுகள் நடைபெற்றன.