தென் கொரியாவில் விஜிபி உலகத் தமிழ்ச் சங்கத்தின் 205 ஆவது திருவள்ளுவர் சிலை கோலாகலமாகத் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
கொரிய தமிழ்ச் சங்கம் சார்பில் 'முதலாம் பன்னாட்டு இந்திய - தமிழ் - கொரிய ஆய்வு மாநாடு 2026', 'கொரிய தமிழ்ச் சங்க விருதுகள் வழங்கும் விழா' மற்றும் '205 ஆம் திருவள்ளுவர் சிலை திறப்பு விழா' ஆகியவை டேஜான் அருகிலுள்ள ஓசோங் அரங்கில் நடைபெற்றன.
இவ்விழாவினைக் கொரிய தமிழ்ச் சங்கம், கவிஞர் முனைவர் ஆலந்தூர் கோ. மோகனரங்கன் தமிழ் ஆய்வு மையம் மற்றும் விஜிபி உலகத் தமிழ்ச் சங்கம் ஆகிய அமைப்புகள் இணைந்து ஒருங்கிணைத்து நடத்தின.
இதுவரை உலகெங்கிலும் உள்ள பல்வேறு நாடுகளில் 204 திருவள்ளுவர் சிலைகளை நிறுவியுள்ள விஜிபி உலகத் தமிழ்ச் சங்கத்தின் தலைவர், செவாலியர் டாக்டர் வி.ஜி. சந்தோசம், தென் கொரிய மண்ணில் 205 ஆம் திருவள்ளுவர் சிலையினைத் திறந்து வைத்தார்.
சிலையைத் திறந்து வைத்து டாக்டர் வி.ஜி. சந்தோசம் உரையாற்றுகையில்,