இலஞ்சப் புலனாய்வுப் பணியகத்தால் வியாழக்கிழமை (28) கைது செய்யப்பட்ட தென் மாகாண சபையின் இரண்டு முன்னாள் பிரதிப் பிரதான செயலாளர்களைப் பிணையில் விடுவிக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஆளுநரின் அனுமதியின்றி, காலியில் உள்ள மற்றொரு தனியார் நிறுவனத்திடமிருந்து இருக்கைகள் இல்லாத 408 நெகிழி நாற்காலிகளை மறு கொள்முதல் மூலம் வாங்கிய 2019 ஆம் ஆண்டு சம்பவம் தொடர்பாக இந்த இரு சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட இருவரும், தென் மாகாண சபை பிரதான செயலகத்தின் முன்னாள் பிரதிப் பிரதான செயலாளர் (நிதி) மற்றும் முன்னாள் பிரதிப் பிரதான செயலாளர் (திட்டமிடல் மற்றும் செயல்பாடு