தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட ' அரவணன்' நோய்த் தடுப்புச் சிகிச்சை நிலையம் இன்று செவ்வாய்க்கிழமை (14.07.2026) திறந்து வைக்கப்பட்டுள்ளது.

அவுஸ்திரேலியாவைத் தளமாகக் கொண்டு மனிதாபிமான சேவைகளில் ஈடுபட்டு வரும் “Paalam” the Bridge to Humanity, Australia அமைப்பின் சுமார்-03 கோடி ரூபா நிதி அனுசரணையுடன் முதற்கட்டமாக இந்த நவீனச் சிகிச்சை மற்றும் பராமரிப்பு மையம் அமைக்கப்பட்டுள்ளது. குறித்த புதிய சிகிச்சை நிலையத்தை இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் மேத்யூ டக்வொர்த் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு திறந்து வைத்தார்.