தெஹிவளை, கவுடான சிரி சங்க போ பகுதியில் அமைந்துள்ள வீடு ஒன்றை இலக்கு வைத்து இன்று வெள்ளிக்கிழமை (11) அதிகாலை  நடத்தப்பட்ட கைக்குண்டுத் தாக்குதலில் இரண்டு சிறுவர்கள் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.இந்த தாக்குதலில் அந்த வீட்டில் இருந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தை மற்றும் இரண்டு பிள்ளைகள் என மூன்று பேர் காயமடைந்த நிலையில் களுபோவில போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.அவர்களில் 10 மற்றும் 14 வயதுகளையுடைய இரண்டு சிறுவர்களும் உயிரிழந்துள்ளதாகவும், உயிரிழந்த சிறுவர்களின்  தந்தை (55) தொடர்ந்தும் சிகிச்சைப் பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.