தேர்தல் ஆணையரை மாற்றக்கோரும் திசைதிருப்பும் அரசியலுக்கு தவெக இரையாகாது என்று அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்தார்.
இதுதொடர்பாக நேற்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: கடந்த ஆண்டு இதே நாளில் மறக்க முடியாத மிகப்பெரிய துயரத்தை நாங்கள் எதிர்கொண்டோம்.
இன்றைய தினம் கரூரில் நினைவஞ்சலி செலுத்தப்படுகிறது. பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு என்னென்ன உதவிகள் தேவையோ, அவை அனைத்தும் செய்யப்படும். அதற்கு நாங்கள் கடமைப்பட்டிருக்கிறோம்.
எஸ்ஐஆர்-ஐ நாங்கள் எதிர்க்கிறோம். தேர்தல் ஆணையரை தனிநபராக மாற்றினால் மட்டும் பிரச்சினை முடிந்து விடாது. திசைதிருப்பும் அரசியலுக்கு தவெக இரையாகாது.
எஸ்ஐஆரை எதிர்க்கிறோம்
நாங்கள் ஆட்சிக்கு வருவதற்கு முன்பே தவெக தலைவர் இதுதொடர்பாக அறிக்கை வெளியிட்டார். அதில் தெளிவாக எஸ்ஐஆரை எதிர்க்கிறோம் என பதிவு செய்துள்ளோம்.
எஸ்ஐஆர் பணிகளில் சீர்திருத்தம் வேண்டும் என்று அப்போதே அவர் கூறியிருந்தார். அதே நிலைப்பாட்டில் தான் நாங்கள் இன்றும் இருக்கிறோம்.
அரசியலுக்காக போராட்டம் நடத்தி, அறிக்கை விடும் கட்சி தவெக அல்ல. எஸ்ஐஆர் பணிகளின் போது குறிப்பிட்ட வாக்குகள் நீக்கப்பட்டன.
அவ்வாறு நடைபெறாமல் இருந்திருந்தால் பெருவாரியான வாக்குகளில் தவெக வெற்றி பெற்றிருக்கும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.