தையிட்டி சட்டவிரோத திஸ்ஸ விகாரையில் நாளை திங்கட்கிழமை (09.11.2026) விசேட வழிபாடுகள் நடைபெறவுள்ளது. இந்த நிலையில் சட்டவிரோத தையிட்டி திஸ்ஸ விகாரைக் கட்டுமானத்தினால் பாதிக்கப்பட்ட காணி உரிமையாளர்களால் திடீர் ஏற்பாடாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள காணி ஆக்கிரமிப்புக்கு எதிரான கவனயீர்ப்புப் போராட்டம் இன்று திங்கட்கிழமை (09.11.2026) காலை-06 மணி முதல் யாழ்.தையிட்டி திஸ்ஸ விகாரைக்கு அருகில் நடாத்தப்படவுள்ளது.
மேற்படி போராட்டத்தில் அனைத்துத் தரப்பினரையும் பேதங்களைக் கடந்து கலந்து கொள்ளுமாறு போராட்ட ஏற்பாட்டாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.