யாழ் தையிட்டியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள திஸ்ஸ விகாரையை அகற்றுமாறு வலியுறுத்தியும், திஸ்ஸ விகாரை அமைந்துள்ள காணி மற்றும் அதனைச் சூழவுள்ள காணிகளைக் காணி உரிமையாளர்களிடம் மீளவும் ஒப்படைக்குமாறு வலியுறுத்தியும் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி பாதிக்கப்பட்ட பொதுமக்களுடன் இணைந்து மாதாமாதம் முன்னெடுக்கும் தொடர் போராட்டம் இன்று வியாழக்கிழமை (30.04.2026) மாலை-04.30 மணியளவில் தையிட்டி திஸ்ஸ விகாரைக்கு அருகில் ஆரம்பமாகி மாலை-06 மணி வரை நடாத்தப்பட்டது.
இதேவேளை, பெளர்ணமி தினமான நாளை வெள்ளிக்கிழமை காலை-07 மணி முதல் மாலை-06 மணி வரையும் இதே கோரிக்கையை வலியுறுத்தி தையிட்டி திஸ்ஸ விகாரைக்கு அருகில் தொடர் போராட்டம் நடாத்தப்படுமெனப் போராட்ட ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.