அமெரிக்காவின் நியூயோர்க்கில் ரயில் தண்டவாளத்தை கடக்க முயன்ற இந்திய வம்சாவளிப் பெண் (வயது 24) உட்பட இருவர் ரயில் மோதி ஸ்தலத்திலேயே உயிரிழந்ததாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கடந்த ஞாயிற்றுக்கிழமை (13) இவர்கள் தண்டவாளத்தை கடந்து செல்ல  முற்பட்டுள்ளனர். அப்போது தனது நண்பர் தவறி விழுந்ததாகவும் அவரைக்  காப்பாற்ற அப்பெண் முயன்றபோது வேகமாக வந்துகொண்டிருந்த ரயில் மோதி இருவரும் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது. விபத்தில் சிக்கிய இந்திய வம்சாவளிப் பெண் அமெரிக்காவின் நியூ ஜெர்ஸியில் டேடன் நகரில் வசித்து வந்தார். மற்றைய நபர் நேபாளத்தைச் சேர்ந்தவர் ஆவார்.இருவரும் இந்தியாவில் உள்ள ரட்கர்ஸ் பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை நிறைவு செய்துவிட்டு அமெரிக்காவில் தங்கி பணியாற்றி வந்தனர்.