நயினாதீவு- குறிகட்டுவான் இடையேயான மாலை நேரப் படகுச் சேவையின் நேரம் அதிகரிப்பு!
Ad Space
Ad Space
Ad Space
நேற்றுத் திங்கட்கிழமை(09.02.2026) முதல் நயினாதீவு- குறிகட்டுவான் இடையேயான தினசரி மாலை நேர இறுதிப் படகுச் சேவையின் நேரம் அதிகரிக்கப்பட்டுள்ளதாக நயினாதீவு தனியார் படகு உரிமையாளர்கள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
இதற்கமைய, நயினாதீவிலிருந்து குறிகட்டுவானுக்கான இறுதிப் படகுச் சேவை மாலை-05:30 மணிக்கும், குறிகட்டுவானிலிருந்து நயினாதீவுக்கான இறுதிப் படகுச் சேவை மாலை-06 மணிக்கும் முன்னெடுக்கப்படுமென நயினாதீவு தனியார் படகு உரிமையாளர்கள் சங்கத்தினர் குறிப்பிட்டுள்ளனர்.
Ad Space
Ad Space
Ad Space