நல்லூர்ப் பிரதேச சபையின் ஆளணிகளை ஒருங்கிணைத்துப் பொதுமக்களுக்கு வீண் அலைச்சல் அற்ற வினைத்திறனான சேவையினை ஒரே கூரையின் கீழ் வழங்கும் பொருட்டு நல்லூர்ப் பிரதேச சபையின் நல்லூர் உப அலுவலகம் நல்லூர்ப் பிரதேச சபையின் தலைமை அலுவலகத்துடன் இணைக்கப்பட்டுள்ளதாக நல்லூர்ப் பிரதேச சபையின் தவிசாளர் பத்மநாதன் மயூரன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பில் செவ்வாய்க்கிழமை (10.02.2026) மாலை அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
இதன்பிரகாரம் நல்லூர்ப் பிரதேச சபையின் நல்லூர் உப அலுவலகத்தின் பணிகள் அனைத்தும் நல்லூர்ப் பிரதேச சபையின் தலைமை அலுவலகத்தில் நடைபெறுகின்றது என்பதனைப் பொதுமக்களுக்கு அறியத் தருகின்றேன் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நல்லூர்ப் பிரதேச சபையின் நல்லூர் உப அலுவலகம் தலைமை அலுவலகத்துடன் இணைப்பு!
Ad Space
Ad Space
Ad Space
Ad Space
Ad Space
Ad Space