வடக்கு மாகாணக் கல்வி அமைச்சின் இளைஞர் விவகார அலகினால் உடல், உள மேம்பாட்டிற்காக இலவசமாக நடத்தப்பட்டு வரும் யோகக்கலை அடிப்படைக் கற்கைநெறியின் புதிய பிரிவு நல்லூர்க் கந்தன் ஆலயப் பின்வீதியில் அமைந்துள்ள நல்லூர் மங்கையற்கரசி வித்தியாலயத்தில் அடுத்த மாதம்-06 ஆம் திகதி சனிக்கிழமை காலை-06 மணியளவில் ஆரம்பமாகவுள்ளது.  .
 
சனி, ஞாயிறு தினங்களிலும், அரச விடுமுறை தினங்களிலும் காலை-06 மணி முதல் காலை-08 மணி வரை நடைபெறும் வகுப்புக்களில் ஆர்வமுள்ள ஆண்கள், பெண்கள் இருபாலாரும் வயது வேறுபாடின்றிக் கலந்து கொள்ள முடியும். சுமார் மூன்று மாத காலங்களைக் கொண்டமைந்த இந்த அடிப்படைக் கற்கைநெறியைப் பூரணமாக முடிப்பவர்களுக்குக் கல்விn அமைச்சினால் அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழ்கள் வழங்கப்படவுள்ளன.