நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ இன்று வெள்ளிக்கிழமை (06) கொழும்பு நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்.
'கிரிஷ்' நிதிப் பரிவர்த்தனை வழக்கு தொடர்பிலேயே நாமல் ராஜபக்ஷ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
குறித்த வழக்கில் அவருக்கு ஏற்கனவே பிணை வழங்கப்பட்டிருந்த போதிலும், எயார்பஸ் ஒப்பந்தப் கொடுக்கல் வாங்கல் தொடர்பான வழக்கில் மூன்று பேரடங்கிய மேல் நீதிமன்ற நீதிபதிகள் குழாத்தினால் பிறப்பிக்கப்பட்ட உத்தரவுக்கு அமைய அவர் தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.