நாயாறு பாலத்தின் திருத்தப் பணிகள் பெரும்பாலும் நிறைவடைந்துள்ளன. தற்போது சில சிறிய பணிகள் மட்டும் மீதமுள்ளன. அவையும் புதன்கிழமை (7) முழுமையாக நிறைவடையும் என முல்லைத்தீவு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ ஒருங்கிணைப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

தற்போதைய நிலைமைகளை கருத்திற்கொண்டு, RDA (Road Development Authority) நாயாறு பாலம் வழியாக பொதுமக்கள் பயணிப்பதற்கு அனுமதி வழங்கியுள்ளது. அதனால், நாயாறு பாலத்தின் வழியாக செல்லும் பொதுமக்கள் மற்றும் பயணிகள்,

பாலத்தின் எந்த இடத்திலும் வாகனங்களை நிறுத்த வேண்டாம்
பாலத்தை ஒருவழிப் பாதையாக (One-way) மட்டும் பயன்படுத்தவும்

மேலும், சில பணிகள் இன்னும் நடைபெற்று வருகின்றன என்பதையும் கருத்தில்கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்படுகிறது.