நியூசிலாந்தின் பொதுத் தேர்தல் நவம்பர் 7 ஆம் திகதி நடைபெறும் என அந்நாட்டு பிரதமர் கிறிஸ்தோபர் லக்சன் அறிவித்துள்ளார்.
"இந்த நிலையற்ற மற்றும் நிச்சயமற்ற உலகில், ஒரு நிலையான மற்றும் வலுவான அரசாங்கத்தை வழங்க யாரால் முடியும் என்பதை நியூசிலாந்து மக்கள் தீர்மானிக்க வேண்டும்" என புதன்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பில் கிறிஸ்தோபர் லக்சன் தெரிவித்துள்ளார் .
ஜெசிந்தா ஆர்டெர்னுக்குப் பின்னர் நியூசிலாந்தின் பிரதமராக தெரிவு செய்யப்பட்ட முன்னாள் விமான நிறுவன நிர்வாகியான லக்சன் அரசியலில் மிகக் குறுகிய காலத்தில் உச்சத்தை அடைந்தவர்.
2020 ஆம் ஆண்டில் பாராளுமன்ற உறுப்பினராகவும், அதன்பின்னர் ஒரு ஆண்டு கழித்து தேசியக் கட்சி தலைவராகவும், 2023 ஆம் ஆண்டு பிரதமராகவும் பதிவியேற்றார்.
நியூசிலாந்து வரலாற்றில் மிகக் குறுகிய காலம் எம்.பி-யாக இருந்து பிரதமரானவர்களில் இவரும் ஒருவர்.
தேர்தல் நெருங்கும் வேளையில், நியூசிலாந்து சில முக்கிய பொருளாதார நெருக்கடிகளைச் சந்தித்து வருகிறது.
நியூசிலாந்து மக்கள் அதிக வாழ்க்கைச் செலவுகள், வீட்டு வசதி பிரச்சினைகள் மற்றும் 5% க்கும் அதிகமான வேலையின்மை விகிதத்தை எதிர்கொள்கின்றனர்.
லக்சன் தலைமையிலான தற்போதைய கூட்டணி அரசாங்கம் (தேசியக் கட்சி, நியூசிலாந்து ஃபர்ஸ்ட் மற்றும் ஆக்ட் கட்சி) 2023 முதல் நாட்டை ஆட்சி செய்து வருகிறது.
தேசியக் கட்சி தலைமையிலான கூட்டணிக்கும் தொழிலாளர் கட்சி தலைமையிலான கூட்டணிக்கும் இடையே கடுமையான போட்டி இருக்கும் என கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன.
"நாங்கள் முதன்முதலில் பதவிக்கு வந்தபோது விஷயங்களைத் திருப்புவது கடினம் என்பதை நாங்கள் அறிந்திருந்தோம், ஆனால் கடந்த இரண்டு ஆண்டுகளாக தேசியக் கட்சி பின்வாங்கி, அடிப்படைகளை சரிசெய்ய கடுமையாக உழைத்து வருகிறது. தற்போது நாடு "சரியான திசையில் பயணிக்கிறது. மேலும் அவரது கட்சி எதிர்காலத்தை உருவாக்குவதில் கவனம் செலுத்துகிறது என்றும் என லக்சன் புதன்கிழமை தெரிவித்துள்ளார்.
நியூசிலாந்தில் நவம்பர் மாதம் 7 ஆம் திகதி பொதுத் தேர்தல்
Ad Space
Ad Space
Ad Space
Ad Space
Ad Space
Ad Space