முன்னாள் காதலரின் நிர்வாண புகைப்படங்களை சமூக ஊடகங்களில் வெளியிட்டதாகக் குற்றம் சாட்டப்பட்ட  பெண் பெண் கணினி பொறியியலாளரை கைது செய்துள்ளதாக  குற்றப் புலனாய்வுத் பிரிவினர் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட பெண்  சந்தேக நபர் யாழ்ப்பாணம், கந்தர்மடத்தில் வசிக்கும் 25 வயதுடைய கணினி பொறியாளர் என  குற்றப் புலனாய்வுத் பிரிவினர் மேலும் தெரிவித்தனர்.

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஒரு இளைஞர், தனது நிர்வாண புகைப்படங்களை தனது முன்னாள் காதலி வாட்ஸ்அப் குழு மூலம் பகிர்ந்து கொண்டதாகக் கூறி, குற்றப் புலனாய்வுத் பிரிவினரிடம்  முறைப்பாடு அளித்துள்ளார்.


இந்த முறைப்பாட்டடின் அடிப்படையில் வடக்கு மாகாண குற்றப் புலனாய்வுத் பிரிவினர் விசாரணை தொடங்கியபோது சந்தேகநபரான பெண் முன்னாள் காதலனின் நிர்வாண புகைப்படங்களை வாட்ஸ்அப் குழுவிற்கு பகிரந்துள்ளமை தெரியவந்ததுள்ளது.

பின்னர் குற்றப் புலனாய்வுத் பிரிவினர்  குறித்த பெண் கைது செய்து விசாரணைகளை மேற்கொண்ட போது இந்த பெண் அவர் சுமார் ஐந்து ஆண்டுகளாக முன்பு முன்னால் காதலடன் உறவை பேணிவந்துள்ளார்.

அவர்களின் காதல் முறிவை தொடர்ந்து,  அந்த பெண் உணர்ச்சி ரீதியான துயரத்தையும் மனக்கசப்பையும் அனுபவித்ததால்  முன்னால் காதலனை பழிவாங்கும் நோக்குடன் நிர்வாண புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இந்நிலையில் குறித்த பெண் யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர்,  பிணையில் விடுவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.