இரத்தினபுரியில் உள்ள Singer Homes வர்த்தக நிலையத்தில் தீ பரவல் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த தீ பரவல் இன்று வெள்ளிக்கிழமை (16) காலை ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தீ பரவலுக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தீயை கட்டுப்படுத்தும் பணிகளில் தீயணைப்பு படையினர் ஈடுபட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.