நீண்ட வரட்சியின் பின் திருகோணமலையில் மழை : விவசாயிகள் மகிழ்ச்சி!
vidiyel 11 வைகாசி 2026 · 05:22 8 views
Ad Space
Ad Space
மிக நீண்ட நாட்களின் பின் கடும் உஷ்ணமான காலநிலையை தொடர்ந்து திருகோணமலை மாவட்டத்தின் பல இடங்களில் மழை பெய்துள்ளது.
கடும் வெப்பமான கால நிலையின் பின் இன்று ஞாயிற்றுக்கிழமை (10) மாலை மழை பெய்துள்ளது. விவசாயிகள் நெற் செய்கைக்காக விதைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வரும் நிலையில் மழை பெய்துள்ளது.
தம்பலகாமம், கிண்ணியா, கந்தளாய் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்ய ஆரம்பித்துள்ளதுடன் மேகம் மப்பும் மந்தாரமுமாக தொடர்ந்தும் காட்சியளிக்கிறது.
கடுமையான வெப்ப நிலை நிலவியதன் காரணமாக வரட்சியாக காணப்பட்ட நிலங்கள் தற்போது மாற்றம் கண்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.