இரும்புக்கம்பியால் அடித்து நபரொருவர் கொலை!
Ad Space
Ad Space
எம்பிலிபிட்டிய - கொடிகந்த பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.
இச்சம்பவத்தில் கொடிகந்த பகுதியைச் சேர்ந்த 52 வயதுடைய ஒருவரே உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த நபருக்கும் மேலும் இருவருக்கும் இடையில் ஏற்பட்ட தர்க்கம் மோதலாக மாறியுள்ளது. இதன்போது இரும்புக்கம்பியால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் குறித்த நபர் உயிரிழந்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்களைக் கைது செய்வதற்காக எம்பிலிபிட்டிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
Ad Space
Ad Space