நீருக்கடியில் சூட்சுமமான முறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் 8 இலட்சத்து 40 ஆயிரம் மில்லி லீற்றர் கோடாவை காத்தான்குடி பொலிஸார் இன்று ஞாயிற்றுக்கிழமை (22) காலை மீட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸ் நிலைய சிறு குற்றத்தடுப்பு பொலிஸ் பொறுப்பதிகாரி ஏ.எஸ்.எம்.ஏ.றஹீம் தெரிவித்தார்.

காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆரையம்பதி மாவிலங்கத்துறை ஆற்றில் நீருக்கடியில் சூட்சுமமான முறையில்  பரள்கள் மற்றும் கலன்களில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் காத்தான்குடி பொலிஸார் மீட்டுள்ளனர்.

மட்டக்களப்பு மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் லலித் லீலாரத்னவின் பணிப்புரையின் கீழ் காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஐ.பி.அழககோனின் வழிகாட்டலில் காத்தான்குடி பொலிஸ் நிலைய சிறு குற்றத்தடுப்பு பொலிஸ் பொறுப்பதிகாரி ரஹீம் தலைமையிதான காத்தான்குடி பொலிஸார் நடாத்திய திடீர்  சுற்றி வளைப்புகளின்போதே கோடா  கைப்பற்றப்பட்டுள்ளன.

தப்பியோடிய சந்தேக நபர்களை பொலிஸார் தேடி வருவதோடு, இது தொடர்பாக காத்தான்குடி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.