வலிகாமம் தெற்குப் பிரதேச சபையின் எல்லைக்குட்பட்ட பகுதிகளைத் தூய்மையாக வைத்திருக்கும் நோக்குடனும், பொது இடங்களில் குப்பைகள் கொட்டுவதைத் தவிர்க்கும் வகையிலும் முதற்கட்டமாக இணுவில் பொதுநூலக வீதி (கெக்கிளிப்பாய் வீதி), வைத்தியகலாநிதி ரகுபதி வீதி (சிங்கத்தின் கலட்டி வீதி)  ஆகிய வீதிகளில் இன்று (18.02.2026) கண்காணிப்புக் கமராக்கள் பொருத்தப்பட்டன.

வலிகாமம் தெற்குப் பிரதேச சபையின் இணுவில் வட்டார உறுப்பினர் தனகோபியின் முயற்சியில் வலிகாமம் தெற்குப் பிரதேச சபையினரால் குறித்த கண்காணிப்புக் கமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இன்று முதல் குறித்த பகுதிகளில் யாராவது குப்பைகள் கொட்டுவதைக் கண்டறிந்தால் வலிகாமம் தெற்குப் பிரதேச சபையால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது.