கம்பஹா, ஜா-எல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நீர்கொழும்பு - கொழும்பு பிரதான வீதியில் ருக்மணி தேவி சந்திக்கு அருகில், இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக ஜா-எல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்து நேற்று திங்கட்கிழமை மாலை (05) பதிவாகியுள்ளது.
கொழும்பு நோக்கிப் பயணித்த வாகனம், அதே திசையில் பயணித்த சைக்கிளுடன் மோதியதில், சைக்கிளின் ஓட்டுநர் காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவர் ஜா-எல பகுதியைச் சேர்ந்த 43 வயதுடையவர் என தெரிவிக்கப்படுகிறது.
சடலம் நீர்கொழும்பு வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன் விபத்துடன் தொடர்புடைய வாகனத்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.
ஜா-எல பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
நீர்கொழும்பு - கொழும்பு பிரதான வீதியில் விபத்து: ஒருவர் பலி!
Ad Space
Ad Space
Ad Space
Ad Space
Ad Space
Ad Space