நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற வன்முறையில் உயிரிழந்த சிறை அதிகாரிகளின் பிரேதப் பரிசோதனைகள், அவர்கள் கொடூரமாகத் தாக்கப்பட்டதை வெளிப்படுத்தியுள்ளதோடு அதிகாரிகள் தலையில் ஏற்பட்ட கடுமையான காயங்களால் உயிரிழந்தனர்.

ஜூலை 5 மற்றும் 6 ஆகிய திகதிகளில் நீர்கொழும்பு சிறையில் நடைபெற்ற வன்முறைச் சம்பவத்தில் உயிரிழந்த சிறை அதிகாரிகள் மற்றும் கைதிகள் உட்பட 24 பேரின் பிரேத பரிசோதனைகளை சட்ட வைத்திய அதிகாரிகள் குழுவினரால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

குறித்த பிரேத 14 மரணங்கள் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களாலும், மேலும் 9 மரணங்கள் தாக்குதலாலும் நிகழ்ந்ததாக வெளிப்படுத்தப்பட்டுள்ளன.

கொழும்பு தேசிய மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்த சிறைக்காவலரின் மரணம் குறித்த தகவலும் இன்றைய தினம் மாளிககந்த நீதிவான் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டதுடன், பிரேதப் பரிசோதனை தொடர்பான சான்றுகளின் விசாரணையும் நிறைவடைந்துள்ளது.