நீலகாமம் தாக்குதல் தொடர்பில் மனோ கணேசன் போலியான விடயங்களை சமூகமயப்படுத்த முயற்சிக்கிறார்! -அருண் ஹேமச்சந்திரா
Ad Space
Ad Space
நீலகாமம் சம்பவம் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் போலியான விடயங்களை சமூகமயப்படுத்த முயற்சிக்கிறார். இது தவறானது என வெளிவிவகார பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறுகையில்,
அவர், அரசாங்கத்தின் ஆதரவுடன் தான் இந்த தாக்குதல் இடம்பெற்றது என்ற நிலைப்பாட்டில் இருந்துகொண்டு பேசுகிறார். இந்த சம்பவம் தொடர்பில் உரிய சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
மலையகத்தில் மே தின கூட்டத்தை கூட நடத்த முடியாதவர்களுக்கு மலையக மக்கள் பற்றி பேச எவ்வித தகுதியும் கிடையாது.
நாட்டு மக்கள் உண்மையை அறிவார்கள். இந்த சம்பவம் தொடர்பில் உரிய சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள். இந்த விடயத்தில் எவரையும் பாதுகாக்க வேண்டிய தேவை அரசாங்கத்துக்கு கிடையாது. உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
Ad Space
Ad Space