"நேர்மை வாரம்" வெற்றிகரமாக நிறைவு
Ad Space
Ad Space
நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சினால் பிரகடனப்படுத்தப்பட்ட "நேர்மை வாரம்" நிகழ்ச்சித்திட்டம், வெள்ளிக்கிழமையுடன் (31) அமைச்சின் வளாகத்தில் வெற்றிகரமாக நிறைவுக்குக் கொண்டுவரப்பட்டது
இதன்போது செயற்திறன், உற்பத்தித்திறன் மற்றும் பொதுச்சேவை வழங்கல் என்பவற்றின் தரத்தை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தப்பட்டது. குறிப்பாக பணியிடச் சூழலின் தூய்மையைப் பேணுதல், கோப்புகள் மற்றும் ஆவணங்களை முறைப்படி ஒழுங்கமைத்தல், பயன்படுத்தப்படாத பொருட்களை அகற்றுதல், சுற்றாடல் மாசுபாட்டைக் குறைத்து பசுமையான, சூழலுக்கு உகந்த முறையில் அமைச்சு வளாகத்தைக் கட்டியெழுப்புவதற்கான நடவடிக்கைகளை எடுத்தல் மற்றும் திறம்பட பொதுச்சேவையை வழங்குவதற்கு ஆதரவளிக்கும் வகையில் ஒழுங்கமைக்கப்பட்ட அலுவலகச் சூழலைப் பேணுதல் என்பன இதில் உள்வாங்கப்பட்டன.
இந்நிகழ்ச்சித்திட்டம் நன்கு ஒழுங்கமைக்கப்பட்ட பணியிடச் சூழலை மாத்திரமன்றி, பொறுப்புக்கூறல், ஒழுக்கம், செயற்திறன், சுற்றாடல் நிலைபேண்தகு தன்மை மற்றும் நல்லாட்சி ஆகியவற்றை மதிக்கும் ஒரு பொதுச்சேவை கலாச்சாரத்தையும் ஊக்குவிப்பதாக நிதியமைச்சு தெரிவித்துள்ளது.
Ad Space
Ad Space