இரத்மலானை விமான நிலையத்திலிருந்து இன்று (15) பயிற்சிக்காக புறப்பட்ட Y-12 ரக விமானம், வானில் பட்டத்தின் நூல்களால் ஏற்பட்ட ஆபத்தைத் தொடர்ந்து அவசரமாக மீண்டும் இரத்மலானை விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது.
தொழில்நுட்ப பரிசோதனையில், விமானத்தின் இடது பக்க சக்கரம், இடது பக்க எஞ்சின் பகுதி உள்ளிட்ட பல பகுதிகளில் பட்டத்தின் நூல்கள் சிக்கியிருந்தமை கண்டறியப்பட்டது.
பட்டத்தின் நூல்கள் அல்லது அதன் பாகங்கள் விமானத்தின் எஞ்சின் அல்லது முக்கிய செயல்பாட்டு அமைப்புகளில் சிக்கினால் பாரிய விமான விபத்து ஏற்பட்டு உயிர் மற்றும் சொத்துச் சேதங்கள் நிகழும் அபாயம் இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதனால், விமான நிலையங்கள் மற்றும் ஓடுதளங்களுக்கு அருகிலுள்ள பாதுகாப்பு வலயங்களில் பொதுமக்கள் பட்டம் விடுவதை முற்றிலும் தவிர்க்குமாறு அதிகாரிகள் அவசர வேண்டுகோள் விடுத்துள்ளனர்.