தமிழகத்​தில் பணி​யின்​போது உயி​ரிழக்​கும் காவலர்களின் குடும்​பங்​களுக்கு ரூ.1 கோடி சிறப்பு நிவாரணம் வழங்​கப்​படும் என்று தமிழக அரசு உத்​தர​விட்​டுள்​ளது.

இது​குறித்து உள்​துறை செயலர் ஏ.கார்த்​திக் வெளி​யிட்ட அரசாணை: தமிழகத்​தில் சட்​டம் ஒழுங்​கைப் பராமரிக்​கும் பணி​யின்​போது அபாரத் துணிச்​சலுடன் செயல்​பட்டு உயிர்த்​தி​யாகம் செய்​யும் காவலர்​களின் குடும்​பங்​களுக்கு ரூ.1 கோடி சிறப்பு நிவாரணம் வழங்​கப்​படும் என்று முதல்​வர் விஜய் கடந்த சட்​டப்​பேரவை​யில் அறி​விப்பு வெளி​யிட்​டிருந்​தார்.

அதை செயல்​படுத்​து​வதற்​கான முன்​மொழிவை டிஜிபி, அரசுக்கு அனுப்​பி​யிருந்​தார். அதில், பணி​யின்​போது வீரதீரச் சூழ்​நிலைகளில் உயி​ரிழக்​கும் காவலர்​களின் குடும்​பங்​களுக்கு ஏற்​கெனவே முதல்​வரின் பொது நிவாரண நிதி​யில் இருந்து ரூ.1 கோடி நிவாரணம் வழங்​கப்​பட்டு வரு​கிறது. மேலும், இதற்​காக ஆண்​டுதோறும் ரூ.2 கோடி நிதி ஒதுக்​கவும் கோரிக்கை விடுத்​திருந்​தார்.

அதையேற்று சட்​டம் ஒழுங்​குப் பணி​யின்​போது வீரதீரச் சூழ்​நிலைகளில் உயி​ரிழக்​கும் காவலர்​ குடும்​பங்​களுக்கு ரூ.1 கோடி சிறப்பு நிவாரணம் வழங்க அனுமதி அளிக்​கப்​படு​கிறது. மேலும், ஆண்​டுதோறும் தொடர் செல​வினத்​துக்​காக ரூ.2 கோடி நிதி வழங்​கவும் ஒப்​புதல் வழங்​கப்​பட்​டுள்​ளது.

இதற்​கான செல​வினம் ‘காவல் துறை​யினர் நலன்’ என்ற தலைப்​பின்​கீழ் மேற்​கொள்​ளப்​படும். இந்த நிதி ஒதுக்​கீடு தொடர்​பான நிர்​வாகப் பொறுப்​பு​களை டிஜிபி கவனிப்பார். இவ்​வாறு கூறப்​பட்​டுள்ளது.

பழனிசாமி அறிக்கை

இதற்​கிடையே அதிமுக பொதுச்​செய​லா​ளர் பழனிசாமி வெளி​யிட்ட அறிக்​கை​யில், தேனி​யில் படுகொலை செய்​யப்​பட்ட சிறப்பு உதவி ஆய்​வாளர் செந்​தில்​குமார் குடும்​பத்​துக்கு அறி​விக்​கப்​பட்​டுள்ள ரூ.40 லட்ச நிதி​யுதவி போது​மானதல்ல.

அதிமுக ஆளுங்​கட்​சி​யாகவோ எதிர்க்​கட்​சி​யாகவோ இருந்​த​போது பணி​யின்​போது உயி​ரிழக்​கும் காவலர்​களுக்கு நிவாரணம் ரூ.1 கோடி வழங்​கப்​படுவதை உறுதி செய்​துள்​ளோம்.

ஆனால், அது கூட இந்த அரசுக்கு நினைவு இல்லை என்​ப​து​ தான் ஆச்​சரிய​மாக உள்​ளது. எனவே, செந்​தில்​குமார் குடும்​பத்​துக்கு ரூ.1 கோடி நிவாரணம் வழங்கி, குடும்​பத்​தில் ஒரு​வருக்கு அரசு வேலை தரவேண்​டும் என்று கூறப்பட்டுள்ளது.