உலகத் தமிழர் பேரமைப்புத் தலைவர் திரு. பழ. நெடுமாறன் அவர்களின் மகன் மாணிக்கம் நெடுமாறன் (57) அவர்கள் ஆசுதிரேலியாவின் மெல்பர்ன் நகரில் இன்று (அக்டோபர் 1, 2026) காலை இந்திய நேரம் 8.45 மணியளவில் இயற்கை எய்தினார் .
திரு. மாணிக்கம் நெடுமாறன் அவர்கள் பல ஆண்டுகளாக மெல்பர்ன் நகரில் பணிபுரிந்து வந்தார். அவர் புத்த மதத்தைத் தழுவி புத்தத் துறவியாக வாழ்ந்து வந்தார்.
கடந்த ஒரு மாத காலமாக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்துவந்த நிலையில், இன்று காலை அவர் இயற்கை எய்தினார். அன்னாரது இறுதிச் சடங்குகள் புத்த மதப்படி மெல்பர்ன் நகரிலேயே நடைபெறும்.
பழ. நெடுமாறன் அவர்களின் கடவுச் சீட்டு முடக்கப்பட்டிருப்பதால் அவரும், அவரது துணைவியாரும் இறுதிச் சடங்கில் கலந்துகொள்ள இயலாத நிலையில் உள்ளனர்.