பாகிஸ்தான் அமைச்சர் கடத்தல்
Ad Space
Ad Space
பாகிஸ்தானின் கைபர் பக்துன்வா மாகாணத்தில் இம்ரான் கானின் பாகிஸ்தான் தெஹ்ரீக் இ–இன்சாப் (பிடிஐ) கட்சி ஆட்சி நடத்தி வருகிறது. அங்கு பொது சுகாதாரத் துறை அமைச்சராக பசல் ஷாகுர் கான் பதவி வகித்து வருகிறார்.கடந்த திங்கள்கிழமை தலைநகர் பெஷாவரின் பிரதான சாலையில் அவர் காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது முகமூடி அணிந்த ஆயுதம் ஏந்திய நபர்கள் அவரது காரை வழிமறித்தனர். பின்னர் அமைச்சர் பசல் ஷாகுர் கானை மர்ம கும்பல் கடத்திச் சென்றது.பிடிஐ கட்சி வட்டாரங்கள் கூறும்போது,``அமைச்சர் பசல் கடத்தப்பட்டது குறித்து போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளோம். ஆனால் புகாரின் மீது இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தலைமையிலான அரசு, பாகிஸ்தான் ராணுவ தரப்பே அமைச்சர் ஷாகுரை கடத்தியிருப்பதாக சந்தேகிக்கிறோம்.சிறையில் இருந்து இம்ரான் கானை விடுவிக்கக் கோரி செப்டம்பர் 27-ம் தேதி இஸ்லாமாபாத்தில் மிகப்பெரிய பேரணியை நடத்த திட்டமிட்டு உள்ளோம். இதை தடுக்கவே எங்கள் மீது தொடர் தாக்குதல்கள் நடத்தப்படுகின்றன'' என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
Ad Space
Ad Space