சி/விபுலானந்தா கல்லூரியில் தரம் 5 புலமைப்பரிசில் மாணவர்களை கௌரவிக்கும் விழா மார்ச் 27இ 2026 அன்று சிஃவிபுலானந்தா கல்லூரியில் இடம்பெற்றது.
இவ்விழா கல்லூரி அதிபர் என். ரவிச்சந்திரன் தலையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக ஐ.டி.எம் நேஷன் கேம்பஸ் இன்டர்நேஷனல் நிறுவனத் தலைவர் டாக்டர் விநாயகமூர்த்தி ஜனகன் கலந்து கொண்டதுடன், சிறப்பு விருந்தினராக ஜனனம் அறக்கட்டளையின் பணிப்பாளர் அதி வணக்கதிற்குரிய பிதா அருட்கலாநிதி எஸ். சந்த்ரு பெர்னாண்டோ மற்றும் பாடசாலை ஆசிரியர்கள், பழைய மாணவர் சங்க உறுப்பினர்கள், பெற்றோர்கள் மாணவர்கள் என பலரும் கலந்துக்கொண்டனர்.
மாணவர்களின் கல்விசார் சாதனைகளை ஊக்குவிக்கும் நோக்கில் டாக்டர் விநாயகமூர்த்தி ஜனகனின் பங்கேற்பு முக்கியத்துவம் பெற்றது.
மேலும், அவர் தனது உரையில். இளம் தலைமுறையினர் கல்வி துறையில் உயர்ந்த இலக்குகளை நோக்கி முயற்சிக்க வேண்டிய அவசியத்தை வலியுறுத்தினார்.