தர்மபுரம் பொலிஸ் பிரிவின் பிரிமந்தாறு பகுதியில் பாதுகாப்பற்ற கிணற்றில் விழுந்து சிறுமி ஒருவர் உயிரிழந்ததாக வந்த தகவல் தொடர்பாக தர்மபுரம் பொலிஸ் நிலையத்தில் விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.

உயிரிழந்தவர் 2 வயது சிறுமி. அவர், தனது வீட்டிற்கு அருகிலுள்ள ஒரு வீட்டின் அருகே பாதுகாப்பற்ற முறையில் தண்ணீர் நிரம்பியிருந்த கிணற்றில் விழுந்து, வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.

சடலம் தர்மபுரம் வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.