பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் அமைந்துள்ள பிரபல நகைக்கடையில், கொள்ளையர்கள் பட்டப்பகலில் கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது. 

இந்நிலையில், பாரீஸில் அமைந்துள்ள De Beers நிறுவனத்துக்குச் சொந்தமான கடை ஒன்றில் சிலர் நுழைந்து கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.

நேற்று வியாழக்கிழமை காலை 11.15 மணியளவில், ஆடம்பர மோட்டார் சைக்கிள்களில் வந்த துப்பாக்கி ஏந்திய சிலர், அந்த நகைக்கடைக்குள் நுழைந்துள்ளனர்.

அவர்கள் யாரையும் தாக்கவில்லை, துப்பாக்கியைக் காட்டி மிரட்டி நகைகளைப் பறித்துக்கொண்டு, தாங்கள் வந்த மோட்டார் சைக்கிள்களில் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். 

மக்கள், பார்த்துக்கொண்டிருக்க, கேஷுவலாக வந்து கொள்ளையடித்துக்கொண்டு அந்த கொள்ளையர்கள் தப்பிச் செல்லும் காட்சிகள் சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளன.

கொள்ளையடிக்கப்பட்ட நகைகளின் மதிப்பு பல லட்சம் யூரோக்கள் இருக்கலாம் என கருதப்படும் நிலையில், பொலிசார் கொள்ளையர்களைத் தேடிவருகிறார்கள்.