பிரான்ஸில் 85 வயது பிரிட்டிஷ் முதியவர் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தென்மேற்கு பிரான்ஸின் டுலூஸ்(Toulouse) நகருக்கு அருகே உள்ள வெர்லஸ்(Verlus) கிராமத்தின் எல்லையில் அமைந்துள்ள வீடு ஒன்றில் தங்கியிருந்த பிரித்தானிய நாட்டை சேர்ந்த 85 வயது ஜான் ஏ(John A) என்ற முதியவர் கொடூரமான அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார்.
காவல்துறையின் விசாரணையில், அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு இருப்பதும், அவரது வீட்டில் இறுதி நேரத்தில் உயிருக்கு போராடிய அடையாளங்களும் காணப்பட்டதாக தெரியவந்துள்ளது.
சனிக்கிழமை அதிகாலை சந்தேகத்திற்குரிய வகையில் தாறுமாறாக சென்ற KIA காரை பொலிஸார் தடுத்து நிறுத்த முயற்சி செய்தனர்.
ஆனால் காவலரின் உத்தரவை மீறி காரை நிறுத்தாமல் அதிலிருந்த இருவரும் ஓட்டிச் சென்றுள்ளனர். மேலும் காரை பாதி வழியிலேயே விட்டு விட்டு அங்கிருந்து தப்பியோடினர்.
காரின் பதிவெண்ணைக் அடிப்படையாக வைத்து உரிமையாளரை தேடி சென்ற போது, அந்த வீட்டில் முதியவர் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டது.
இந்த சம்பவம் கொள்ளை முயற்சியாக அல்லது வேறு ஏதேனும் காரணங்களால் நிகழ்த்தப்பட்டுள்ளதா என அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் உள்ளூர் மக்களுக்கு அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.