பிறரின் கியூ.ஆர் குறியீடுகளைப் பயன்படுத்தி சட்டவிரோதமான முறையில் எரிபொருள் பெற்றுக்கொண்டமை தொடர்பாக ஆயிரத்திற்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக டிஜிட்டல் பொருளாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாகத் கருத்துத் தெரிவித்த அமைச்சின் செயலாளர் வர்ண ஸ்ரீ தனபால, இந்த மோசடிகள் குறித்து பொலிஸாருடன் இணைந்து விசேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார். எரிபொருள் பெற்றுக்கொள்வதில் இடம்பெற்ற அத்துமீறல்கள் மற்றும் மோசடிகள் தொடர்பில் இதுவரை ஆயிரத்திற்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன.
கிடைத்துள்ள முறைப்பாடுகளில் 150-க்கும் அதிகமானவை மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
இந்தச் சம்பவங்களுடன் தொடர்புடைய சில சந்தே நபர்கள் ஏற்கனவே பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
எரிபொருள் நிரப்பு நிலையங்களில் உள்ள பாதுகாப்பு சிசிரிவி கமரா காட்சிகளைப் பரிசோதிப்பதன் மூலம் சந்தேகநபர்களை அடையாளம் காணும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
தவறுதலாக அல்லது போதிய அறிவின்மை காரணமாக பிறரின் கியூ.ஆர் குறியீடுகளைப் பயன்படுத்திய சம்பவங்களும் இந்த முறைப்பாடுகளுக்குள் அடங்குவதாக அமைச்சின் செயலாளர் சுட்டிக்காட்டினார். தற்போது வரை இலங்கையில் சுமார் 06 மில்லியனுக்கும் அதிகமானோர் எரிபொருள் கியூ.ஆர் குறியீட்டைப் பெற்றுக்கொள்வதற்காகப் பதிவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்க