பிரித்தானியா - புங்குடுதீவு நலன்புரிச் சங்கத்தின் ஏற்பாட்டில் யாழ்.புங்குடுதீவு ஶ்ரீ சித்திவிநாயகர் மகா வித்தியாலயத்துக்கு வேலணைப் பிரதேச சபை உறுப்பினர் கருணாகரன் நாவலன் ஊடாக திங்கட்கிழமை (01.06.2026) புதிய நிழற்பிரதி இயந்திரம் கையளிக்கப்பட்டது.
இதற்கான நிதி உதவியைப் புலம்பெயர்ந்து தற்போது பிரித்தானியாவில் வாழ்ந்து வரும் புங்குடுதீவைச் சேர்ந்த பிரசுதன் வன்னியசிங்கம் வழங்கியிருந்தார்.