புத்தகங்கள் வாழ்க்​கையை உன்​னத​மாக்​கும், தொடர் வாசிப்பு அறிவை அகலப்​படுத்​தும் என்று சென்னை புத்தக காட்சி நிறைவு​விழா​வில் உச்​ச நீ​தி​மன்ற நீதிபதி ஆர்​.ம​காதேவன் கூறி​னார்.

தென்​னிந்​திய புத்தக விற்​பனை​யாளர் மற்​றும் பதிப்​பாளர் சங்​கம் (பபாசி) சார்​பில் 49-வது சென்னை புத்தக காட்சி ஜனவரி 8-ம் தேதி தொடங்கி நேற்​றுடன் முடிவடைந்​தது. சுமார் ஆயிரம் அரங்​கு​கள் இடம்​பெற்ற இந்த புத்தக காட்​சியை 13 லட்​சத்​துக்​கும் மேற்​பட்​டோர் பார்​வை​யிட்​டுள்​ளனர்.




புத்தக காட்சி நிறைவு ​விழா நேற்று மாலை நடை​பெற்​றது. இதில் உச்​ச நீ​தி​மன்ற நீதிபதி ஆர்​.ம​காதேவன் சிறப்பு விருந்​தின​ராக கலந்​து​கொண்டு பதிப்​புத் ​துறை​யில் 25 ஆண்​டு​கள் பணிநிறைவு செய்த பணி​யாளர்​களுக்கு விருது வழங்கி கவுர​வித்​தார்.

அவர் பேசியதாவது: மொழி, கலாச்​சாரம், சிந்​தனை இவை அனைத்​தும் நமது முன்​னோர்​கள் அடுத்த தலை​முறைக்கு கொண்​டு​வந்து சேர்த்​தவை. தமிழ் மொழி 3 ஆயிரம் ஆண்டு பழமையான மூத்த மொழி. ஞானத்தை வாரி வழங்​கிய மொழி. பழந்​தமிழ் படைப்​பு​கள் தமிழின் உன்​னதத்தை எடுத்​துக்​காட்​டு​கின்​றன.

















தமிழில் கோடிக்​கணக்​கான படைப்​பு​கள் உள்​ளன. அவற்​றில் முதன்​மை​யானது திருக்​குறள், அடுத்​தது கம்​ப​ரா​மாயணம் என்​கிறார் நாமக்​கல் கவிஞர் ராமலிங்​கம் பிள்​ளை. தொல்​காப்​பி​யம் வெறும் தமிழ் இலக்கண நூல் அல்ல, அது தமிழ் மண்​ணின் வாழ்வை எடுத்​துரைக்​கும் நூல். தமிழ் ஏன் சிறந்த மொழி, அதை ஏன் உயர்த்​திப் பிடிக்க வேண்​டும் என்​ப​தற்​கும் தமிழில் இலக்​கி​யங்​களில் காரணங்​கள் சொல்​லப்​பட்​டுள்​ளன.

அதில் அறி​வின் உச்​சத்தை காணலாம். இன்​றைய இயந்​திர உலகில், தமிழ்ச்​ சமூகம் தமிழ் மொழியையை​யும், தமிழ்க்​ கலாச்​சா​ரத்தை​யும் அடுத்த தலை​முறைக்கு கடத்த வேண்​டும் என்​பது​தான் இன்​றைய அடிப்​படை தேவை. அறி​வியல், மருத்து​வம், தத்​து​வம்என அனைத்து துறை​கள் குறித்​தும் தமிழில் குறிப்​பிடப்பட்​டுள்​ளன.