பூஜித்த ஜயசுந்தரவின் கோரிக்கையை நிராகரித்தது நீதிமன்றம்
Ad Space
Ad Space
உயிர்த்த ஞாயிறு குண்டுவெடிப்புச் சம்பவங்கள் தொடர்பான வழக்கில், குற்றம் சாட்டப்பட்டுள்ள முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித்த ஜயசுந்தர முன்வைத்த கோரிக்கையை கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (24) வெள்ளிக்கிழமை நிராகரித்துள்ளது.
முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித்த ஜயசுந்தர குறித்த கோரிக்கையை முன்வைத்திருந்தார்.
இதனைப் பரிசீலித்த நீதிபதி பிரியந்த லியனகே தலைமையிலான மூவர் கொண்ட மேல் நீதிமன்ற நீதிபதிகள் குழாம் அக்கோரிக்கையை ஏற்க மறுத்து அதனை நிராகரித்துள்ளது.
இந்த வழக்கின் பிரதிவாதி தரப்பு சாட்சிகளாக ஓய்வுபெற்ற சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் நந்தன முனசிங்க மற்றும் கிழக்கு மாகாணத்திற்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் வருண ஜயசுந்தர ஆகியோரும் நீதிமன்றத்தில் முன்னிலையாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Ad Space
Ad Space