போலித் தங்க ஆபரணங்களை தயாரித்து விற்பனை செய்த குற்றச்சாட்டில் நான்கு பெண்கள் உள்ளிட்ட ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இது தொடர்பாக பெறப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின்போதே குறித்த சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் நீர்கொழும்பு பிரிவு அதிகாரிகள் இந்தச் சுற்றிவளைப்பை மேற்கொண்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட பெண்கள் சந்தேகநபர்கள் கொலன்னாவ மற்றும் நீர்கொழும்பு பகுதிகளைச் சேர்ந்த 35 முதல் 38 வயதுக்குட்பட்டவர்கள் எனவும், மற்றைய ஆண் சந்தேகநபர் ஹையந்துடுவ பகுதியைச் சேர்ந்த 48 வயதுடையவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பாக குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் நீர்கொழும்பு பிரிவினர் மேலதிக விசாரணைகளை தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனமை குறிப்பிடத்தக்கது.