மஞ்சளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது!
Ad Space
Ad Space
புத்தளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பாலவி பகுதியில், புத்தளம் பிரதேச குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது, சட்டவிரோதமான முறையில் வரியின்றி நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட மஞ்சளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டு புத்தளம் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
இதன்போது சந்தேகநபரிடமிருந்து 994 கிலோகிராம் 150 கிராம் மஞ்சள் கைப்பற்றப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் நுரைச்சோலை பகுதியைச் சேர்ந்த 34 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை புத்தளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Ad Space
Ad Space