மத்திய பிலிப்பைன்ஸின் செபு நகரின் பினாலிவ் பகுதியில் கழிவு பிரிப்புத் தொழிற்சாலையில் ஏற்பட்ட குப்பைச் சரிவில் பெண் தொழிலாளி ஒருவர் உயிரிழந்ததுடன், ஏழு தொழிலாளர்கள் காயமடைந்துள்ளனர். மேலும் தொழிலாளர்கள் 27 காணாமல் போயுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த விபத்து வெள்ளிக்கிழமை (09) இடம்பெற்றுள்ளதுடன், அந்த பகுதியில் பெரும் அளவிலான குப்பை மற்றும் இடிபாடுகள் சரிந்து விழுந்ததாகவும், அதில் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் இதுவரை எட்டு பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் குப்பை மேடையில் பணியாற்றிய தொழிலாளர்களே எனத் தெரிவிக்கப்பட்டாலும், தொழிலாளர்கள் அல்லாதவர்கள் உள்ளனரா என்பது தெளிவாக தெரியவரவில்லை என அந்நாட்டு பொலிஸார் தெரிவித்தனர்.
மீட்கப்பட்டவர்களில் பெண் தொழிலாளி ஒருவர் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்ததாகவும் மற்றவர்கள் அனைவரும் காயங்களுடன் உயிர் தப்பியுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
பிலிப்பைன் வரலாற்றில் இதுவரை நடந்த மிக மோசமான இத்தகைய விபத்து, திறந்த குப்பை மேடைகள் குறித்து பொதுமக்கள் மத்தியில் பெரும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய பிலிப்பைன்ஸில் குப்பை மேடு சரிந்து விழுந்ததில் ஒருவர் பலி, ஏழு பேர் காயம், 27 பேர் மாயம்
Ad Space
Ad Space
Ad Space
Ad Space
Ad Space
Ad Space