மத்திய மாகாண தமிழ் பாடசாலைகளின் பிரச்சினைகள் தொடர்பாக மத்திய மாகாண ஆளுநர் பேரசிரியர் சரத் அபேகோனுடன் கலந்துரையாடல் ஒன்று இடம் பெற்றது.
பெருந்தோட்டப் பாடலைகள் உட்பட மாகாண தமிழ் பாடசாலைகளின் பிரச்சினைகள், குறைபாடுகள் என்பன இங்கு கலந்துரையாடப்பட்டன.
இதில் பெருந்தோட்ட, சமூக உட்கட்டமைப்பு பிரதி அமைச்சர் பிரதீப் சுந்தரலிங்கம், தலைமையில் பிரதிநிதிகள் கண்டியில் உள்ள ஆளுநர் காரியாலயத்தில் சந்தித்து கலந்தரையாடினர்.
ஆசிரியர் குறைபாடு, ஆசிரியர்களது கல்வி மேம்பாடு, பாடசாலைகளுக்கான பாதைகள் அபிவிருத்தி, போக்குவரத்து வசதிகளை ஏற்படுத்தல், தேவையான தராதரம் உள்ள அதிபர்களை நியமித்தல், பாடசாலைக் காணிகள் தொடர்பான பிரச்சினைகள் முதலான பல்வேறு அம்சங்கள் இங்கு கலச்துரையாடப்பட்டன.
கண்டி மாவட்டப்பாராளுமன்ற உறுப்பினர் தனுர திசாநாயக்கா, மாத்தளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர். தினேஷ் ஹேமந்த மற்றும் தோட்ட சமூக உட்கட்டமைப்பு அமைச்சின் ஆலோசகர் கலாநிதி பீ.பீ. சிவப்பிரகாசம் உற்பட பலர் கலந்து கொண்டனர்.
மத்திய மாகாண தமிழ் பாடசாலை பிரச்சினைகள்: ஆளுநர் சரத் அபேகோனுடன் அவசர சந்திப்பு!
Ad Space
Ad Space
Ad Space
Ad Space
Ad Space
Ad Space